என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போர் நிறுத்தம்
நீங்கள் தேடியது "போர் நிறுத்தம்"
உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்துவரும் ஏமனில், போர்நிறுத்தம் தொடங்கிய சில நிமிடங்களில் ஒப்பந்தம் மீறப்பட்டு ஆங்காங்கே மோதல்கள் ஆரம்பித்துள்ளன. #YemenConflict #YemenClashes
சனா:
ஏமனில் உக்கிரமாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஹொடைடா மாகாணம் மற்றும் துறைமுக நகரமான ஹொடைடாவில் போர் நிறுத்தம் செய்வது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்களும், அரசாங்கத் தரப்பும் ஒப்புக்கொண்டன.
கடந்த வியாழக்கிழமை ஸ்வீடனில் ஐ.நா. ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொடக்கமாக இது இருக்கும் என்று சிலர் நம்பினர்.
உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக முதலில் கூறப்பட்டாலும், ஆங்காங்கே நடந்து வந்த தாக்குதல்களாலும், கடுமையான மோதல்களாலும் சண்டை நிறுத்தம் செயல்பாட்டுக்கு வருவது தாமதமடைந்தது குறிப்பிடத்தக்கது. #YemenConflict #YemenClashes

ஹொடைடா துறைமுகம் நிவாரணப் பொருள்கள் செல்வதற்கான நுழைவாயிலாக இருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த நகரம். ஆனால், சண்டை நிறுத்தம் தொடங்கிய உடனேயே இந்த நகரில் ஆங்காங்கே மோதல்கள் நிகழ்ந்துள்ளன. கிழக்கு ஹொடைடாவில் அரசாங்கப் படைகள் மீது கிளர்ச்சியாளர்கள் ஷெல் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை ஸ்வீடனில் ஐ.நா. ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொடக்கமாக இது இருக்கும் என்று சிலர் நம்பினர்.
உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக முதலில் கூறப்பட்டாலும், ஆங்காங்கே நடந்து வந்த தாக்குதல்களாலும், கடுமையான மோதல்களாலும் சண்டை நிறுத்தம் செயல்பாட்டுக்கு வருவது தாமதமடைந்தது குறிப்பிடத்தக்கது. #YemenConflict #YemenClashes
ஆப்கானிஸ்தானில் அதிபர் அறிவித்த போர்நிறுத்தத்துக்கு இடையில் தலிபான் பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்டவர்களில் 149 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். #Afghanforces #149hostagesfreed #Talibanambush
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான்கள் கஸ்னி நகரை கைப்பற்றுவதற்காக கடந்த 15 நாட்களாக ஆவேசமாக போரிட்டு வருகின்றனர். இந்த நகரம் அவர்கள் கையில் சிக்காமல் இருப்பதற்காக அரசுப் படையினரும் தீவிரமான எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இருதரப்பு மோதல்கள் கடந்த புதன்கிழமை முடிவுக்கு வந்துள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி நேற்று அழைப்பு விடுத்தார்.
இன்றிலிருந்து (20-ம் தேதி) முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாதுன்நபி விழா (நவம்பர் மாதம் 21-ம் தேதி) வரை இந்த போர்நிறுத்தம் அமலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அந்நாட்டின் குன்டுஸ் மாகாணத்துக்கு உட்பட்ட கான் அபாட் மாவட்டம் வழியாக இன்று காலை சென்ற மூன்று பேருந்துகளை துப்பாக்கி முனையில் தலிபான் பயங்கரவாதிகள் வழிமறித்து மடக்கினர். அவற்றில் வந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி சுமார் 170 பேரை கடத்திச் சென்றனர்.
பிணை கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் எங்கே கடத்திச் செல்லப்பட்டனர்? என்பது தெரியாத நிலையில் அவர்களை மீட்க குன்டுஸ் மாகாணம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த வேட்டையில் பிணைகைதிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் தலிபான்களின் கடுமையான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டனர். பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் 7 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 149 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களை மீட்பதற்காக அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#Afghanforces #149hostagesfreed #Talibanambush
ஆப்கானிஸ்தானில் ரம்ஜானையொட்டி அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், தலிபான்கள் விரும்பினால் போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயார் என அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். #Afganistan #Taliban #Ceasefire
காபுல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தன்வசம் வைத்துள்ள தலிபான், அரசை கவிழ்க்க போராடி வருகிறது. இதனால் அரசுக்கு எதிராக போட்டி அரசு ஒன்றையும் நடத்தி வருகிறது.
தலிபான் அமைப்பை கட்டுப்படுத்த அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசும் பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. இருதரப்பிலும் போரால் பல உயிர்கள் பலியாகின்றன.
இந்நிலையில், இந்த போர் நிறுத்தம் முடிவடைந்து விட்டதால், தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செவ்வாய் அன்று மீண்டும் . போர்க்களம் திரும்பினர். எனவே, அரசு படைகளும் போர் நிறுத்தம் முடிந்து பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இனி ஈடுபடும் என அதிபர் அஷ்ரப் கனி அறிவித்துள்ளார். அதன்படி தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தொடங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அஷ்ரப், அமைதியை விரும்புவதை வெளிக்காட்டவே இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகவும், தலிபான் அமைப்பு விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயார் எனவும் தெரிவித்தார். #Afganistan #Taliban #Ceasefire

இதற்கிடையே கடந்த மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் கொண்டாடப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு, 5 நாள் போர் நிறுத்தம் ஒன்றை அதிபர் அஷ்ரப் கானி அறிவித்திருந்தார். இதனை ஏற்ற தலிபான் அமைப்பும் 3 நாள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில், இந்த போர் நிறுத்தம் முடிவடைந்து விட்டதால், தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செவ்வாய் அன்று மீண்டும் . போர்க்களம் திரும்பினர். எனவே, அரசு படைகளும் போர் நிறுத்தம் முடிந்து பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இனி ஈடுபடும் என அதிபர் அஷ்ரப் கனி அறிவித்துள்ளார். அதன்படி தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தொடங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அஷ்ரப், அமைதியை விரும்புவதை வெளிக்காட்டவே இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகவும், தலிபான் அமைப்பு விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயார் எனவும் தெரிவித்தார். #Afganistan #Taliban #Ceasefire
“போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை. சூரிய உதயத்திற்கு முன்னர் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து தலீபான்கள் வெளியேற வேண்டும்” என்ற தலீபான்கள் அறிவிப்பால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. #Afghanistan #EidFestival
காபூல்:
ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பு காலத்தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார். அதனை ஏற்று முதல் முறையாக தலீபான்களும் 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தனர். அந்த 3 நாளில் போர் நிறுத்தம் மீறப்படவில்லை.
மாறாக ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் படையினரும், தலீபான்களும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்து பரிமாறியதோடு, தலீபான்கள் பொதுமக்களுடன் ‘செல்பி’ படங்களும் எடுத்துக்கொண்டனர். இது ஆப்கானிஸ்தான் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதால் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதாக அதிபர் அஷரப் கனி அறிவித்தார். அதிபரின் இந்த முடிவை அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வரவேற்றன.
ஆனால் ரம்ஜான் பண்டிகை முடிந்து விட்டதால் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் ஆயுதங்களை ஏந்த தலீபான்களுக்கு அந்த அமைப்பு உத்தரவிட்டது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பில் “போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை. சூரிய உதயத்திற்கு முன்னர் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து தலீபான்கள் வெளியேற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அரசு தரப்பு போர் நிறுத்தம் அடுத்த 10 நாட்களுக்கு தொடரும் என்றும், அதே சமயம் பாதுகாப்புபடை வீரர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறபோது தங்களை தற்காத்துக்கொள்ள எதிர் தாக்குதலை நடத்தலாம் என்றும் அதிபர் அஷரப் கனி அறிவித்துள்ளார்.ஒரு தரப்பு போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், மற்றொரு தரப்பு போர் நிறுத்தம் தொடருவதாகவும் அறிவித்திருப்பதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது. #Afghanistan #EidFestival #Tamilnews

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் நிறுத்தம் நீட்டிக்கப் படாது என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.
புதுடெல்லி:
காஷ்மீரில் பாதுகாப்பு படைகளை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் புனித ரமலான் மாதத்தையொட்டி மத்திய அரசு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கடந்த மாதம் 17-ந்தேதி நிறுத்தி வைத்தது.
பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் மட்டுமே பதில் தாக்குதலை மேற்கொண்டது. மற்றபடி பெரும்பாலான நாட்களில் பாதுகாப்பு படையினர் அமைதி காத்து வந்தனர்.
இந்தநிலையில் ரமலான் மாதம் முடிவடைந்து, ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்களும் நிறைவடைந்த நிலையில் காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்பு படைகள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன.
இதுபற்றி டெல்லியில் மத்திய உள்துறை இலாகா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளை மத்திய அரசு ரமலான் மாதத்தையொட்டி தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருந்தது. தற்போது போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. எனவே பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் காஷ்மீரில் மீண்டும் தொடங்கிவிட்டன’ என்று கூறப்பட்டு உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியபோதிலும் பாதுகாப்பு படையினர் மிகவும் அமைதி காத்து முன்உதாரணமாகத் திகழ்ந்துள்ளனர். இதை நாடு முழுவதிலும் மக்கள் வரவேற்று உள்ளனர். முஸ்லிம் சகோதர, சகோதரிகளின் வேண்டுகோளை ஏற்று பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டன. அமைதியை விரும்பும் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து பயங்கரவாதிகளை தனிமைப் படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, காஷ்மீரில் அனந்தநாக், பாரமுல்லா மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் சில இடங்களில் வன்முறை கும்பலால் ரெயில் பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் நேற்றுமுன்தினம் மாலை காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. நேற்றும் ரெயில்கள் இயக்கப்படவில்லை.
பயணிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்களின் பாதுகாப்பு கருதி ஸ்ரீநகர்-பட்காம், அனந்தநாக்-காஸிகுந்த் உள்ளிட்ட மார்க்கங்களில் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் 14 முறை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
காஷ்மீரில் பாதுகாப்பு படைகளை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் புனித ரமலான் மாதத்தையொட்டி மத்திய அரசு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கடந்த மாதம் 17-ந்தேதி நிறுத்தி வைத்தது.
பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் மட்டுமே பதில் தாக்குதலை மேற்கொண்டது. மற்றபடி பெரும்பாலான நாட்களில் பாதுகாப்பு படையினர் அமைதி காத்து வந்தனர்.
இந்தநிலையில் ரமலான் மாதம் முடிவடைந்து, ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்களும் நிறைவடைந்த நிலையில் காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்பு படைகள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன.
இதுபற்றி டெல்லியில் மத்திய உள்துறை இலாகா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளை மத்திய அரசு ரமலான் மாதத்தையொட்டி தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருந்தது. தற்போது போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. எனவே பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் காஷ்மீரில் மீண்டும் தொடங்கிவிட்டன’ என்று கூறப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
காஷ்மீரில் பயங்கரவாதமும், வன்முறையும் இல்லாத நிலையை உருவாக்கிட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே அதை தடுத்து நிறுத்த அனைத்து வித நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, காஷ்மீரில் அனந்தநாக், பாரமுல்லா மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் சில இடங்களில் வன்முறை கும்பலால் ரெயில் பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் நேற்றுமுன்தினம் மாலை காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. நேற்றும் ரெயில்கள் இயக்கப்படவில்லை.
பயணிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்களின் பாதுகாப்பு கருதி ஸ்ரீநகர்-பட்காம், அனந்தநாக்-காஸிகுந்த் உள்ளிட்ட மார்க்கங்களில் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் 14 முறை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தலீபான்களை சமரச பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷரப் கனி அழைத்து உள்ளார். #Afghanistan #AshrafGhani
காபூல்:
ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பு காலத்தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார். இதுதொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டபோது, தலீபான்கள் வன் முறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, “வன்முறையானது, மக்களின் இதயங்களையும், மனங் களையும் கவர்ந்து இழுக்காது. அதற்கு பதிலாக தலீபான் களை தீவு போன்று தனிமைப்படுத்தும். இதை தலீபான்கள் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வருகிற உள்நாட்டுப் போரில், முதல் முறையாக தலீபான்களும் 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தனர்.
இது வரை இல்லாத வகையில் அந்த 3 நாளில் போர் நிறுத்தம் மீறப்படவில்லை. அதுமட்டுமின்றி, ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் படையினரும், தலீபான்களும் ஒருவரை யொருவர் கட்டித்தழுவி வாழ்த்து கூறினர். பொது மக்களுடனும் தலீபான்கள் ‘செல்பி’ படங்கள் எடுத்து, அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆப்கானிஸ்தான் மக் களிடையே இந்த போர் நிறுத்தம் மிகுந்த வரவேற்பை பெற்றது. நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்று முன்தினம் தலீபான்களும், ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர். இந்த சம்பவத்தை தவிர போர் நிறுத்த காலத்தில் அமைதி நிலவியது.
இந்த நிலையில் போர் நிறுத்தத்தை மேலும் 9 நாட்களுக்கு நீட்டித்து அதிபர் அஷரப் கனி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பு பற்றி உடனடியாக தலீபான்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இதற்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு அதிபர் அஷரப் கனி டெலிவிஷனில் உரை ஆற்றினார். அப்போது அவர் கூறும்போது, “தலீபான்களுடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது. தலீபான்கள் முன் வைத்து உள்ள அனைத்து பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து சமரச பேச்சுவார்த்தையின்போது விவாதிப்பதற்கு தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறும்போது, “ரம்ஜான் நிகழ்ச்சியில் தலீபான்களும், அரசு அதிகாரிகளும் ஒன்றாக கலந்து கொண்டது, நாம் அனைவரும் சமாதானத்துக்காகத்தான் உள்ளோம் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது” என்றும் கூறினார்.
போர் நிறுத்த நீட்டிப்பு தொடர்பாக டுவிட்டரில் அதிபர் அஷரப் கனி ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர், “ஆப்கானிஸ்தான் தலீபான்களும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். போர் நிறுத்தத்தின்போது, காயம் அடைந்த தலீபான்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்போம். தேவையான மனித நேய உதவிகளையும் செய்வோம். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தலீபான்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவும், சந்திக்கவும் அனுமதிக்கப் படும்” என கூறி உள்ளார்.
இரு தரப்பு சமரச முயற்சிகளை அமெரிக்கா வரவேற்று உள்ளது.
இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ குறிப்பிடுகையில், “ஆப்கானிஸ்தான் போருக்கு முடிவு கட்டுகிற வகையில், இரு தரப்பினரும் சமரச உடன்பாடு, அரசியல் தீர்வு காண்பதற்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்” என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. #Afghanistan #AshrafGhani #Tamilnews

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்த பகுதியில் இன்று நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #Taliban #Afghanceasefire #AfghanBlast
காபூல் :
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் அமைப்புக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.
ஆனால், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்திய 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு தலிபான்களும் நேற்று முதல் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.
ரம்ஜான் கொண்டாடப்படும் இன்று ஆயுதங்கள் ஏதும் இன்றி ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வந்த தலிபான் அமைப்பினர் அங்கிருந்த அரசு படையினரை கட்டித்தழுவி ரம்ஜான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தலிபான்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தலைநகர் காபூல் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாலிபன்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ரம்ஜானை கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில், அந்நாட்டின் ரோடாட் மாவட்டத்தில் உள்ள நானகராகர் பகுதியில் தாலிபன்கள், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்த பகுதியில் திடீர் என காரில் இருந்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் தாலிபன்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் உள்பட சுமார் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. #Taliban #Afghanceasefire #AfghanBlast
ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவத்தினர் மற்றும் தலிபான் அமைப்பினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். #Taliban # Afghanceasefire
காபூல்:
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் அமைப்புக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.
ஆனால், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்திய 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு தலிபான்களும் நேற்று முதல் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ரம்ஜான் கொண்டாடப்படும் இன்று ஆயுதங்கள் ஏதும் இன்றி ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வந்த தலிபான் அமைப்பினர் அங்கிருந்த அரசு படையினரை கட்டித்தழுவி ரம்ஜான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், ராணுவத்தினருடன் சேர்ந்து தலிபான்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
‘இதை எங்களால் நம்பவே முடியவில்லை, ராணுவ வீரர்கள் மற்றும் தலிபான்கள் அருகருகே நிற்பது வித்தியாசமான உணர்வை தருகிறது. இந்த ரம்ஜான் மிக அமைதியாக கொண்டாடப்படுகிறது. இன்று நான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். இதேபோல் அமைதியான ரம்ஜான் ஆப்கானிஸ்தானில் முன்னெப்போதும் கொண்டாடப்படவில்லை’ என கல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்தார். #Taliban # Afghanceasefire
ஆப்னானிஸ்தானில் இன்று அடுத்தடுத்து பயங்கரவாத தக்குதல் நடைபெற்றுள்ளது, காபூலில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #AfghanAttack #AfghanCeasefire
கபுல் :
ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும், அங்கு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதுவரை ஏராளமான பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் காபுலில் உள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பட்டு அமைச்சகத்தின் நுழைவு வாயில் அருகே இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பட்டு அமைச்சகத்தின் அருகே இன்று நடைபெற்ற இந்த கோர தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுள்ள இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.
அந்நாட்டின், ஜலாலாபாத் பகுதியில் உள்ள கல்வித்துறை கட்டிடத்தின் அருகே இன்று காலை பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #AfghanAttack #AfghanCeasefire
ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தத்தை அதிபர் அறிவித்த பிறகு நடந்த சண்டையில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 10 பேரை ராணுவம் சுட்டுக்கொன்றது. #AfghanAttack #AfghanTalibanKilled #AfghanCeasefire
காபூல்:
இந்த போர்நிறுத்த அறிவிப்பை தலிபான்கள் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்கர் மாகாணத்தில் நடந்த சண்டையில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 10 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
நங்கார்கர் ஆபரேசன் முடிந்துவிட்டதாகவும், அதன்பின்னர் போர்நிறுத்தத்தை பின்பற்ற உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், தலிபான்கள் தாக்கினால் பதிலடி கொடுப்போம் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், நங்கார்கரில் உள்ள எம்.பி. ஒருவரின் வீட்டைக் குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். #AfghanAttack #AfghanTalibanKilled #AfghanCeasefire
ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிபர் அஷ்ரப் கனி நேற்று அறிவித்தார். அதே சமயம், இன்ன பிற வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்கர் மாகாணத்தில் நடந்த சண்டையில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 10 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
நங்கார்கர் ஆபரேசன் முடிந்துவிட்டதாகவும், அதன்பின்னர் போர்நிறுத்தத்தை பின்பற்ற உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், தலிபான்கள் தாக்கினால் பதிலடி கொடுப்போம் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், நங்கார்கரில் உள்ள எம்.பி. ஒருவரின் வீட்டைக் குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். #AfghanAttack #AfghanTalibanKilled #AfghanCeasefire
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையில் அவ்வப்போது நடக்கும் துப்பாக்கிச் சண்டையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜான் மாதத்தையொட்டி பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துமாறு பாதுகாப்பு படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையில் பரபரப்பு சற்று தணிந்து அமைதியான சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையில் அவ்வப்போது நடக்கும் துப்பாக்கிச் சண்டையை தற்காலிகமாக நிறுத்துமாறு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.

×

X